உங்கள் பள்ளி படிப்பை தமிழகத்தில் முடித்துவிட்டு அதர்ம மாநிலத்திற்கு உங்கள் உயர் படிப்பிற்காக நீங்கள் செல்லும்போது கண்டிப்பாக வெளி மாநிலத்தில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் கட்டாயமாக இடம்பெயர்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கூறப்படுகிறது. அதனால் நீங்கள் தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களில் உங்களது உயர் கல்வியை தொடங்கும் மாணவராக இருக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இடம் பெயர்வு சான்றிதழை ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து பெறுவது அவசியம்.
இந்த இடம் பெயர்வு சான்றிதழை விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு தேர்வு இயக்கம் இணையதளத்திற்கு சென்று நீங்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கீழே உள்ள லிங்கின் மூலம் கிளிக் செய்து உங்களது பெயர் உங்களுடைய 12 ஆம் வகுப்பு நிரந்தர பதிவன் எந்த வருடத்தில் பன்னிரண்டாம் வகுப்பை தமிழகத்தில் படித்தீர்கள் என்ற ஆண்டு மற்றும் மாதம் இதை விண்ணப்பத்தில் நிரப்பி 505 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினால் ஒரு வாரத்தில் உங்களுக்கு இடம் பெயர்வு சான்றிதழ் கிடைத்துவிடும்.
Tags
Education