தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009 | How to apply Marriage Registration Certificate in tamil

                            

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009:
கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய திருமணங்கள்:
இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாளன்று அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் அனைத்துத் திருமணங்களும், திருமணத்துடன் தொடர்புடைய நபர்களின்(மணமகன்/மணமகள்).தனி நிலைச் சட்டத்தின் கீழ் அல்லது அவர்களின் வழக்கம் அல்லது பயன்பாடு அல்லது பாரம்பரியப்படி பராமரித்து வரும் திருமணப் பதிவேட்டில் மேற்படி திருமணம் உள்ளீடு செய்யப்பட்டிருப்பதும், இச்சட்டத்தின் பிரிவு 3ன் படி பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம், 2009, திருமண விதிகள், 2009 தான் 24.11.2009 முதல் நடைமுறையில் உள்ளது..

திருமணத்தின் குறிப்பாணை:-

திருமணத்திற்குரிய நபர்கள் வகுத்தளிக்கப்பட்ட படிவத்தில், இரட்டையில், ஒரு குறிப்பாணை தயார் செய்து ரூ.100/- கட்டணத்துடன் நேரிலோ அல்லது சிறப்பு சூழ்நிலைகளில் பதிவுசெய்யப்பட்ட தபால் மற்றும் ஒப்புகை சீட்டுடன் / வேக தபால் மற்றும் ஒப்புகை சீட்டுடன் 90 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள திருமணப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.குறிப்பாணை 90 நாட்கள் கடந்த பின் அடுத்த 60 நாட்களுக்குள் ரூ.150/- கட்டணத்துடன் அனுப்பலாம். குறிப்பாணை 150 நாட்களுக்குப் பிறகு ரூ.1150/- கட்டணத்துடன் அனுப்பலாம்.

மேல்முறையீடு:-

பிரிவு 7ன் கீழ் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணையினால் பாதிக்கப்படுவதாகக் கருதும் எந்த நபரும், ஆணி பெற்ற நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
மாவட்டப் பதிவாளரின் ஆணையினால் பாதிக்கப்படுவதாகக் கருதினால், குறித்த காலத்திற்குள் பதிவுத்துறை தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம்.மேல்முறையீட்டில் பதிவுத்துறை தலைவரால் எடுக்கப்படும் முடிவே இறுதியானது.

திருமண பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன :-

  • திருமணம் நடந்ததற்கான ஆவணம்.
  • ஆதார் கார்ட்.
  • ஸ்மார்ட் ரேஷன் கார்டு.
  • பள்ளிச் சான்று.
(இவை அனைத்தும் இருவருக்கும் பொருந்தும்)

இரு சாட்சி நபர்களுடைய ஆதார் அட்டை.





கருத்துரையிடுக

புதியது பழையவை
close