12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு என்னென்ன சான்றிதழ்கள் தயாராக இருக்க வேண்டும்? முழு பட்டியல் இங்கே!! What certificates should students who have completed 12th standard be prepared for admission to higher education..?

 


12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு என்னென்ன சான்றிதழ்கள் தயாராக இருக்க வேண்டும்? முழு பட்டியல் இங்கே!

 

முதலில் வாங்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள் :-

  • மதிப்பெண் சான்றிதழ்
  • மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate – TC)
  • 7.5% Bonafided Certificate (6to12th Govt School)

Dஇந்த 3-ம் பள்ளியிலிருந்து உடனே பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

 

மற்ற கட்டாய சான்றிதழ்கள்

1️. ஆதார் அட்டை :

👉 இருப்பது கட்டாயம். திருத்தங்கள் இருந்தால் இ-சேவை மையத்தில் திருத்திக் கொள்ளலாம்.

2. இருப்பிடச் சான்றிதழ் :

👉 தமிழக அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்காக முக்கியமானது.

3. ஜாதிச்சான்றிதழ் :

👉 அரசு ஒதுக்கீட்டிலும், கல்வி உதவித் தொகைகளிலும் தேவைப்படும்.

4. வருமானச் சான்றிதழ் :

👉 கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசு நலத்திட்டங்களுக்கு பயன்படும்.

5. முதல் பட்டதாரி சான்று :

👉 இல்லையெனில் தமிழக அரசு இ சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


முக்கிய குறிப்புகள் :

வருமானச் சான்றிதழ் காலாவதியாகும். அதனால் புதியதாக எடுத்து வைத்திருக்க வேண்டும்.

பிற மாநில மாணவர்கள் (8 முதல் 12ம் வகுப்பு தமிழகத்தில் படித்தவர்கள்) இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.

🎯 மாணவர்களுக்கு சில தனிப்பட்ட ஆலோசனைகள்

பல மாணவர்கள் அறிவிப்பு வந்த பிறகு தான் ஓடி ஓடி சான்றிதழ்கள் எடுக்க முயற்சிக்கிறார்கள். இது நிறைய அழுத்தத்தை ஏற்படுத்தும்.

 

அதனால் இப்போதே எல்லா ஆவணங்களும் தயார் செய்து வையுங்கள்.

 

                                                        @internet_cafe

கருத்துரையிடுக

புதியது பழையவை
close