இனி பேன்சி எண்களுக்கு ஏலம்..!
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை வெளியிட்டது தமிழக அரசு
"வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.2,000 நிர்ணயம்
பேன்சி எண்களுக்கான அடிப்படை விலை ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
வாகன உரிமையாளர்கள் Parivahan இணையதளத்தில் பதிவு செய்து
பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும்"
-தமிழ்நாடு அரசு.
வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு - வரைவு விதிகளை வெளியிட்டது தமிழக அரசு.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து வரைவு விதிகள் வெளியீடு.
ஆட்சேபனைகளை 30 நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சென்னை தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.