2,299 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு எப்போது?
தயாராக வைத்துகொள்ள வேண்டியவை என்ன?
தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கு எப்போது விண்ணப்பங்கள் பெறப்படும், தேர்வு முறை, அவகாசம் மற்றும் தயாராக வைத்துகொள்ள வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்துகொள்ளலாம்.
சுமார் 3 வருடங்களாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவதற்கு கோரிக்கை எழுந்த நிலையில், தமிழ்நாடு அரசு மொத்தம் 2,299 பணியிடங்களை
நிரப்ப அனுமதி வழங்கி அரசாணையை இந்த மாதம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, கிராம
உதவியாளர்களை தேர்வு செய்ய தகுதிகள் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை ஆகியவற்றை
குறித்து அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்த
கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, 2,299
கிராம
உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட வாரியாக அறிவிப்பு
வெளியிட்டு தேர்வு செய்யப்பட உள்ளது. குறிப்பாக இப்பதவிக்கு 10-ம் வகுப்பு
தகுதிப்போதும், எழுத்துத் தேர்வு இல்லை என்ற காரணத்தினால், பலர் அறிவிப்பு
எப்போது வெளியாகும் என ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டுள்ளனர். இந்நிலையில்,
அறிவிப்பு
வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் அறிவிப்பு
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியான நிலையில், இதற்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரம் வெளியிடப்படும் என தெரியவந்துள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, வட்டார அளவில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பணியை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்
அதன்படி, ஜூலை முதல் வாரத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, விண்ணப்பங்கள் பெற 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். எனவே, விண்ணப்பதார்கள் அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கிராம உதவியாளர் பணிக்கு தகுதிகள் என்ன?
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு தகுதி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பதார்களுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருப்பது கட்டாயமாகும். 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தைக் கொண்டு கட்டாயம் படித்திருக்க வேண்டும். சைக்கிள்/ இரு சக்கர வாகனம் ஒட்ட தெரிந்திருப்பது கூடுதல் சிறப்பு.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதார்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்,
வாகனம்
ஒட்டுதல், தமிழ் வாசிப்பு, எழுத்து திறன் மற்றும் நேர்காணல் அடிப்படையில்
தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்கள் அந்த பகுதியை சேர்ந்தவராக இருக்க
வேண்டும். அதற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
முதலில்
விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வு
நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு
விடுக்கப்படும். 10-ம் வகுப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். சான்றிதழ்
சர்பார்ப்பு முடித்து இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
தயாராக வைத்துகொள்ள வேண்டியவை என்ன?
விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 21 நட்களுக்குள் வாசிப்பு
மற்றும் எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும். 15 நாட்களுக்குள் நேர்முகத்
தேர்வு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள்
பட்டியல் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.
கிராம
உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்
சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வசிப்பிடத்தை குறிக்கும் சான்றிதழ், வீட்டு
முகவரியை தெரியப்படுத்தும் வகையிலான அடையாளர் அட்டை (ஆதார், வாக்காளர் அட்டை) ஆகியவற்றை
தயாராக வைத்துகொள்ளுவது சிறந்தது.
IMPORTANT LINKS :-
VAO ASSISTANT GO LINK
DISTRICT WISE VACANCIES LINK